பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

 இவ்வெண்பாவில் குறித்துள்ள அகப்பூசை முறைகளை எல்லாம் சுருக்கித் தரும் முறையில் அமைந்தது,

அஞ்செழுத்தால் அர்ச்சித்து அமர்வோரும்,

(திருவருட்பா-671)

எனவரும் நெஞ்சறிவுறுத்தலாகும்.

இச்செயலை நானே செய்தேன், இதனைப் பிறர் செய்தார், இஃது என்னுடையது, இதற்குரிமையுடைய வினைமுதல் யானே, என எண்ணும் இம்மனக்கோணலை ஞானத்தீயால் வெதுப்பி நிமிர்த்து ஆன்மாவாகிய தான் 'என்செயலாவது யாதொன்றுமில்லை, எல்லாம் நின் செயலே' என இறைவன் அருள் வழியடங்கிச் செந்நெறியில் நிற்பாராயின் மெய்ப்பொருளாகிய இறைவன் நேரே வெளிப்பட்டுத் தன்னையே அவர்கட்கு அளித்து நிற்பான். அந்நிலையில் ஆன்மாவின் வினைகள் யாவும் இருந்த இடம் தெரியாமல் மறைந்தோடியொழிவனவாம். இவ்வாறன்றி நான் செய்தேன் என்னும் செருக்குடன் இருப்பார்க்கு இறைவன் வெளிப்படுதலின்றி அவர்தம் வினைப் பயனை அவரே நுகரும்படி செய்வன்; மேலும் கன்மங்களைச் செய்விப்பன். சிவஞானம் வெளிப்பட்டாலன்றி இவ்வுலகில் ஒருவருக்கும் யான் எனது என்னுஞ்செருக்கு அறாது என அறிவுறுத்துவது,

யான் செய்தேன் பிறர்செய்தார் என்ன தியானென்னும்
இக்கோணை ஞானஎரி யால்வெதுப்பி நிமிர்த்துத்
தான்செவ்வே நின்றிடஅத் தத்துவன் தான் நேரே
தனையளித்து முன்னிற்கும் வினையொளித் திட்டோடும்