பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156


தொழில்களைச் செய்வித்தருள்கின்றான் என்னும் உண்மையினை விளக்குவது,

சிவம்சத்தி நாதம்விந்து சதாசிவம் திகழும் ஈசன்
உவந்தருள் உருத்திரன்தான் மால்அயன் ஒன்றில் ஒன்றாய்ப்
பவந்தரும் அருவ நாலிங் குருவநா லுபயமொன்றாய்
நவந்தரு பேதம் ஏகநாதனே நடிப்பன் என்பர்

(சிவஞானசித்தி-சுபக்கம் 164)

என வரும் சிவஞான சித்தியாராகும்.

மேற்குறித்த ஒன்பது வடிவங்களுள் முற்குறித்த சிவம் முதலான நான்கும் அருவத் திருமேனிகள் எனவும், சதாசிவம் ஒன்றும் அருவுருவத்திருமேனி எனவும், மகேசன் உருத்திரன் மால் அயன் என்னும் நான்கும் உருவத்திரு மேனிகள் எனவும் இவ்வாறு மூவகைகளாகக் குறித்த ஒன்பது தெய்வநிலைகளையும் இயக்கிநிற்கும் முழுமுதற் பொருளாக விளங்குபவன், இறைவன் ஒருவனே எனவும் அருணந்திசிவனார் கூறிய பாடற் பொருளை,

உருநான்கும் அருநான்கும் நடுவே நின்ற
உருஅருவ மொன்றும் இவை உடன்மேல் உற்ற
ஒருநான்கும் இவை கடந்த ஒன்றுமாய்

(திருவருட்பா-2172)

எனவும்,

ஒன்பதாகிய, உருவுடைப் பெருமான் (௸ 1038)

எனவும்,

நவநிலைக்கும் அதிகாரம் நடத்துகின்ற அரசாய்
நண்ணியநின் பொன்னடிகள்

(௸ 3094)