பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

161


ஆளுடைய அரசு அருண்மாலையில்

தேர்ந்த உளத்திடை மிகவும் தித்தித் தூறும்
செழுந்தேனே சொல்லரசாம் தேவேமெய்ம்மை
சார்ந்து திகழ் அப்பூதி அடிகட்கின்பம்
தந்தபெருந் தகையே எம் தந்தையே என்
கூர்ந்தமதி நிறைவேஎன் குருவே எங்கள்
குலதெய்வமே சைவக் கொழுந்தே துன்பம்
தீர்ந்த பெரு நெறித்துணையே ஒப்பிலாத
செல்வமே அப்பனெனத்திகழ்கின் றோனே.

(திரு. 3246)

எனவரும் பாடல்,

உற்றான் அலன் தவம் தீயினின் றானலன் ஊண்புனலா
அற்றான் அலனுகர்வுந் திருநாவுக்கரசு எனுமோர்
சொற்றான் எழுதியும் கூறியுமே என்றுந் துன்பில்பதம்
பெற்றான் ஒருநம்பி அப்பூதி என்னும் பெருந்தகையே

(நால்வர் நான்மணிமாலை 38)

எனவரும் சிவப்பிரகாசர் பாடலை அடியொற்றியதாகும்.

இப்பாடலில் 'என்றும் துன்பில்பதம் பெற்றான் ஒரு நம்பி அப்பூதி என்னும் பெருந்தகையே' என்னுந் தொடர்ப் பொருளை, 'மெய்மை சார்ந்து திகழ் அப்பூதி அடிகட்கு இன்பம் தந்த பெருந்தகையே’ என்ற தொடரில் வள்ளலார் விளக்கியுள்ளமை காணலாம்.