பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

165


சன்மார்க்க முத்தி முதலே சர்வபரிபூரண
அகண்ட தத்துவமான சச்சிதா நந்த சிவமே

(தாயு. சச்சி-6)

எனவும்,

வேதாந்த சமரச நன்னிலைபெற்ற
வித்தகச் சித்தர் கணமே

(சித்தர்கணம் 1 முதல் 10)

எனவும் வரும் தாயுமானார் வாய்மொழிகள் இக்கருத்தை வற்புறுத்துவன ஆகும்.

'வேதாந்த சித்தாந்த சமரசமும் வருமோ'

(திருவருட்பா 3378)

எனவரும் வள்ளலார் வாய்மொழி இங்கு ஒப்புநோக்கத் தகுவது.

'எங்கள் பதம் எங்கள் பதம் என்றுசமயத்தேவர்
இசை வழக்கிடு நற்பதம்'

(1960 - 1)

என வரும் திருவடிப்புகழ்ச்சித் தொடர்,

சமய கோடிகளெலாம் தன்தெய்வ மென்தெய்வ மென்று
எங்கும் தொடர்த்தெதிர் வழக்கிடவும் நின்றதெது

(தாயு. 1)

என வரும் தாயுமானார் அருளிய பரசிவ வணக்கத்தை நினைவு படுத்துதல் காணலாம்.

மதுரையில், சோமசுந்தரக் கடவுள் தன் அடியார்க்கு அருளும் பொருட்டு நிகழ்த்தியருளிய அறுபத்து நான்கு