பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166


திருவிளையாடல்களுள் பலவற்றை நினைந்து நெஞ்சம் நெக்குருகிய இராமலிங்க வள்ளலார் தாம்அருளிய திருவருட்பாப் பாடல்களில் எடுத்துரைத்துப் போற்றியுள்ளமை திருவிளையாடற் புராணத்தில் வள்ளலாருக்கு உள்ள ஈடுபாட்டினை நன்கு புலப்படுத்தும். எல்லாம்வல்ல இறைவன் செம்மனச் செல்வியாகிய வந்தி அம்மையார் பொருட்டு வையை வெள்ளத்தை அடைத்தல் லேண்டிக் கூலியாளாக எழுந்தருளி வையைப் பெரு வெள்ளத்தையடைக்க மண்சுமந்து கூலி கொண்டு பாண்டியமன்னன் ஓச்சிய பிரம்பினால் மொத்துண்ட எளிமைத்திறத்தினை எண்ணி யெண்ணி இரங்கிய நிலையில் அமைந்தது,

வன்பட்ட கூடலில் வான்பட்டவையை வரம் பிட்டநின்
பொன்பட்ட மேனியில் புண்பட்ட போதில் புவிநடையாம்
துன்பட்ட வீரர் அந்தோ வாதவூரர்தம் துரியநெஞ்சம்
என்பட்டதோ இன்று கேட்டஎன் நெஞ்சம் இடிபட்டதே

(2231)

என இராமலிங்க வள்ளலார் பாடிய பாடல் ஆகும் இப்பாடல் மதுரையில் இறைவன் தன்னைவழிபடும் அடியார் கட்கு எளிவந்து நிகழ்த்திய திருவிளையாடல் திகழ்ச்சிகளில் வள்ளலாரது உள்ளத்தோய்வினை நன்கு புலப்படுத்தல் காணலாம்.

அளிய நெஞ்சம் ஒர் அறிவுருவாகும்
அன்பர்தம் புடை அணுகிய அருள்போல்
எளிய நெஞ்சினேற் கெய்திடா தேனும்
என்னில் பாதிமட் டீந்தருள்வாயேல்