பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168


அருட்பிரகாச வள்ளலார், ஒழிவில் ஒடுக்கம், தொண்டைமண்டல சதகம், சின்மயதீபிகை, மனுமுறை கண்ட வாசகம், சீவகாருணிய ஒழுக்கம் என்னும் உரை நடை நூல்களை இயற்றியுள்ளமையும் வள்ளலாரின் பரந்த கல்விப்புலமையை எடுத்துக்காட்டுவதாகும். வள்ளலார் அறிவுறுத்தும் தத்துவ நுண்பொருள்களுக்குக் காழிக் கண்ணுடைய வள்ளலார் சிவஞானவள்ளலார் இயற்றிய நூல்களும், திருப்போரூர்சாந்தலிங்க சுவாமிகள் இயற்றிய கொலைமறுத்தல் என்னும் நூலும், அதற்குத் திருப்போரூர்ச் சிதம்பர சுவர்மிகள் இயற்றிய உரையும் , விருத்தாசலம் குமாரதேவர் இயற்றிய சுத்தசாதகம் முதலிய நூல்களும் முன்னுாற் சான்றுகளாக அமைந் துள்ளன. இக்குறிப்புக்களை உற்று நோக்குங்கால் வள்ளலார்க்குத் தமிழ்நூற் பரப்பினுள் அமைந்த புலமைத்திறம் இனிது புலனாகும். இவ்வாறே சமய நுட்பம் பற்றி உபநிடதங்கள், ஆகமங்கள் முதலிய வடமொழி நூல்களை இராமலிங்கவள்ளலார் இறைவன் அருளால் ஒதாதுணரப் பெற்றார் என்பது திருவருட் புகழ்ச்சியிலமைந்த வடமொழித் தொடர்களாலும் நாதாந்தம் முதலிய ஆறந்தங்களின் இயல்புரைக்கும், திருவருட்பாப் பகுதிகளாலும் நன்கு தெளியப்படும்.