பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சன்மார்க்க நெறி வளர்த்த தவச் செல்வர்


மெய், வாய், கண், மூக்கு, செவி யென்னும் ஐம்பொறிகளின் வழியாக உலகநுகர்ச்சிகளில் ஊற்றுணர்வு, சுவையுணர்வு, ஒளியுணர்வு, நாற்றவுணர்வு, ஒசையுணர்வு என்னும், ஐம்புல ஆசைகளிலும் தன்னை மறந்து தாழும் தன்மை மக்களது மனத்தியல்பாகும். இவ்வாறு உலக துகர்பொருள்களில் ஈர்த்துச் செல்லும் ஐம்பொறி உணர்வுகளையும் அடக்கும் வன்மையின்றி ஐயுணர்வின் வழியே செல்லும் மனத்தினைத்திருத்தி அவ்வைந்தையும் அடக்கியாள வல்ல ஆற்றலை உயிர்கட்கு வழங்குதல் இறைவனது அருளியல்பாகும். நல்லொழுக்க நெறி நிற்பார்க்கு இன்றியமையாத புலனடக்கத்தையும் பொய்மையே பெருக்கும் பாசங்களின் நீக்கத்தையும் தந்து நல்வழிப்படுத்தற் பொருட்டு எல்லாம் வல்ல இறைவன் உயிர்க்குயிராய் உள் நின்றுணர்த்திய ஒழுக்க நெறியே உண்மையான சமயநெறியாம். இவ்வுண்மை,

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடு வாழ்வார்

(குறள்-6)

எனவரும் திருக்குறளால் அறிவுறுத்தப்பட்டது.

இங்கு "பொறிவாயில் ஐந்தவித்தான் என” இறைவனைக் குறித்தது, இறைவன் தனக்கு ஐம்பொறி