பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

171


'வேண்டில் ஐம்புலன் என் வசமல்ல'

(திருமுறை-7-60-7)

எனவும்,

'வறிதே நிலையாத விம் மண்ணுலகின்
நரனாக வகுத்தனை நானிலையேன்
பொறிவாயிலில் வைந்தினையுமவியப்
பொருதுன் னடியே புகுஞ்சூழல் சொல்வே'

(திருமுறை-7-3-3)

எனவும் நம்பியாரூரர் அருளிய தேவாரத் தொடர்கள் 'பொறிவாயில் ஐந்தவித்தான்' எனவரும் திருக்குறட் பொருளைப் புலப்படுத்தி நிற்றல் காணலாம். 'பொய்தீர் ஒழுக்க நெறி நின்றார்' என்ற தொடரை

'பொய்யிலா மெய்ந்நெறிக்கே தக்கிருந்தார்'

(2–42–1)

என விரித்துப் பொருள் கொள்வர் ஆளுடைய பிள்ளையார், எல்லாம் வல்ல இறைவனே உலகமக்கள் உய்தி பெறுதல் வேண்டி மெய்ந்நெறியாகிய ஒழுக்க நெறியினை வகுத்து அருளினான் என்பது,

'மேவிய வெந் நரகத்தில் அழுந்தாமை நமக்கு
மெய்ந் நெறியைத் தான் காட்டும்
வேத முதலானை'

(7-40-10)

என வரும் சுந்தரர் வாய்மொழியால் நன்கு புலனாகும்.

இறைவனால் வகுத்தருளப்பெற்ற 'மெய்ந்நெறியாகிய' இச்சமய, நெறியினைத் திருநெறி எனவும், பெருநெறி எனவும் சன்மார்க்க மெனவும் திருமுறை ஆசிரியர்கள்