பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xvii


சாதிகுலம் என்றும் சமயமதம் என்றுமுப
நீதியியல் ஆச்சிர நீட்டென்றும் - ஒதுகின்ற
பேயாட்டம் எல்லாம் பிதிர்ந்தொழந்த வேபிறர்தம்
வாயாட்டம் தீர்ந்தனவே மற்று.

வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர்
வேதாக மத்தின் விளைவறியிர் - சூதாகச்
சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை
என்ன பயனோ இவை.

வேதங்களையும் விரிவுகளையும் புராண சாத்திரங்களையும் வடமொழி வாயிலாகவே திறம்படக் கற்றவர்; எனினும் பகுத்தறிவுக்கும் உலகவொற்றுமைக்கும் உயிர் நலத்துக்கும் ஒவ்வாதவற்றைக் கடுஞ்சொற்களால் இகழ்ந்துரைந்தவர் இராமலிங்கனார் போல் யாருமில்லை. அவ்வுலக நாட்டமின்றி இவ்வுலக நாட்டம் வலியுறுத்தியவர். அருட்பாவின் உள்ளத்தைத் தெள்ளிதின் உணர்ந்த பேராசிரியர் வெள்ளைவாரணனார்.

'ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
ஒருமை யுளராகி உலகியல் நடத்தல் வேண்டும்'

என்றபடி, 'இந்நாட்டிற் கல்வி, செல்வம் முதலியவற்றால் ஒத்தார் உயர்ந்தார் தாழ்ந்தார் ஆகிய எல்லா மக்களும் தம்முள் வேறு பாடின்றி ஒத்த உரிமையுடையராகி, நமது நாட்டின் அரசியல் ஆட்சியில் பங்கு கொள்ளும் வாய்ப்பினைப் பெறுதல் வேண்டும் என்பதே வடலுார் வள்ளலாரின் உயர்ந்த குறிக்கோளாகும்' என்று முடித்திருப்பது சிறிதும் புனைந்துரையன்று. இந்தியப் பாரதத்தில் என் வகைக் கொள்கையினரும் சிந்திக்கவேண்டிய செயலுரை