பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

189


இராமலிங்கர் ஐந்து மாதக் குழந்தையாக இருந்த போதே அவர்தம் பெற்றோர்கள் தில்லையிற் கூத்தப் பெருமானை வழிபட வந்தனர். தில்லைவாழ் அந்தணர் சிதம்பர ரகசியத்தின் திரையினைத் தூக்கிக் கற்பூரம் காட்டித் தரிசனம் செய்வித்தார். அப்போது பெற்றோர் கையிலிருந்த கைக்குழந்தையாகிய இராமலிங்கரும் அத்தரிசனத்தைக் கண்டு கூத்தப் பெருமான் திருவருளால் அவ்விரகசியத்தின் தத்துவ விளக்கத்தினை உணர்ந்து கொண்டார் என்பது வரலாறு. இச்செய்தி,

தாய்முதலோரொடு சிறிய பருவமதில் தில்லைத்
தலத்திடையே திரை தூக்கத் தரிசித்த போது
வேய்வகை மேல் காட்டாதே என்றனக்கே எல்லாம்
வெளியாகக் காட்டிய என்மெய்யுறவாம் பொருளே

(4133)

எனவரும் வள்ளலார் வாய்மொழியால் இனிது புலனாகின்றது. இவ்வாறு வள்ளலார் தம் குழந்தைப் பருவத்திலே தில்லைப் பெருங்கோயிலில் கூத்தப் பெருமான் உணர்த்த உணர்ந்து கொண்ட 'எல்லாம் வெளியே' (தாயுமானார்) என்னும் அநுபவ உண்மையினைத் தமது நாற்பத்தொன்பதாம் வயதில் உத்தரஞான சிதம்பரம் என்னும் வடலூரிலே ஏழு திரைகளை நீக்கி அருட்பெருஞ் சோதி ஆண்டவரைக் கண்டுபோற்றும் சோதிதரிசன அமைப்பினை அமைத்துக் காட்டியருளினார் எனக் கருத வேண்டியுள்ளது.

தில்லைப் பெருங்கோயிலில் சிதம்பர ரகசியத்தினை மறைக்கும் நிலையில் அமைக்கப் பெற்றுள்ள திரை ஒன்றே என்பதனை யாவரும் அறிவர். அங்ங்னமாகவும், வடலூரில் வள்ளலார் அமைத்துள்ள திரைகள் ஏழாகும். “சுடர்விட்டுளன் எங்கள் சோதி” என ஆளுடையபிள்ளை