பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

193



'விடய நிலைகளை வெவ்வேறு திரைகளால்
அடர்புற மறைக்கும் அருட்பெருஞ்சோதி'

(அகவல் 827-8)

என்பது முதல்

'மறைக்குந்தலைவர்கள் வகை பல கோடியை
அறத்தொடு மறைக்கும் அருட்பெருஞ்சோதி'

(அகவல் 859-60)

என்பதீறாகவுள்ள அருட்பெருஞ் சோதியகவற் பகுதியால் உய்த்துணரப்படும்.

இவ்வாறு ஆன்மா, தலைவனாகிய இறைவனையும் உயிராகிய தன்னையும் தனக்குத் தநுகரண புவன போகங்களாகப் பயன்படும் தத்துவத் தொகுதிகளையும் மறைத்து நிற்கும் திரைகள் யாவும் மறைப்பாற்றலாகிய திரோதான சத்தியின் தொடர்புடையனவேயென்பது,

'ஆன்மப் பிரகாசத்தை மறைக்க மாயாசத்திகளாகிய ஏழு திரைகளுண்டு. அவையாவன;

கறுப்புத் திரை மாயாசத்தி
நீலத்திரை கிரியா சத்தி
பச்சைத் திரை பராசத்தி
சிவப்புத் திரை இச்சாசத்தி
பொன்மைத் திரை ஞானசத்தி
வெண்மைத் திரை ஆதிசத்தி
கலப்புத்திரை சிற்சத்தி'

என அருட்பிரகாச வள்ளலார் தரும் விளக்கத்தால் உய்த்துணரப்படும்.

'நிலம், நீர், நெருப்பு, வளி, வான், மகத், அகங்காரம் என்னும் ஏழு திரைகளாகக் கூடிய தத்துவத்துள் ஒளிரும்