பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

199


சோதியாண்டவர் திருநடம் புரியும் இயல்பினை விரித்துப் போற்றுவதாகும்.

உற்றியலும் அணுவாதி மலைஅந்த மான உடல்
உற்றகரு வாகி முதலாய்
உயிராய் உயிருக்குள் உறும் உயிராகி உணர்வாகி
உணர்வுள் உணர்வாகி உணர்வுள்
பற்றியலும் ஒளியாகி ஒளியின் ஒளியாகி அம்
பரமாய்ச் சிதம்பரமும் ஆய்ப்
பண்புறு சிதம்பரப் பொற்சபையும் ஆய்அதன்
பாங்கோங்கு சிற்சபையும் ஆய்த்
தெற்றியலும் அச்சபையின் நடுவில் நடம் இடுகின்ற
சிவமாய் விளங்கு பொருளே
சித்தெலாம் செய்எனத் திருவாக் களித்தெனைத்
தேற்றி அருள் செய்த குருவே
மற்றியலும் ஆகிஎனை வாழ்வித்த மெய்ஞ்ஞான
வாழ்வேஎன் வாழ்வின் வரமே
மணிமன்றில் நடுநின்ற ஒருதெய்வமே எலாம்
வல்ல நடராச பதியே

(திருவருட்பா 3665)

இத்திருவருட்பா ஒளியின் ஒளியாகிய இறைவன் பெரு வெளியாய் ஞானவெளியாய்த் திகழும் சிதம்பரத் திருத்தலத்தே பொன்னம்பலமும், சிற்றம்பலமுமாய் இணைந்து விளங்கும் தெய்வசபையிலே திருக்கூத்தாடியருளும் திறத்தினை எடுத்துரைத்துப் போற்றுவதாகும்:

பாராதி பூதமொடு பொறிபுலன் கரணமும்
பருதியும் காலம் முதலாப்
பகர்கின்ற கருவியும் அவைக்குமேல் உறுசுத்த
பரமாதி நாதம் வரையும்
சீராய பரவிந்து பரநாத முந்தனது
திகழங்கம் என்று ரைப்பத்