பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202


மணிமன்றின் நடுநின்ற ஒரு தெய்வமே எலாம்
      வல்ல நடராச பதியே.

- (3673)

தத்துவ நெறிகளாகிய ஆறந்தங்களுக்கும் உரிய நலன்கள் பலவற்றையும் தருவது சன்மார்க்கமாகிய ஞானநெறி யென்பதும், அத்தகைய பெருநெறி உலகில் ஓங்கும்படி எல்லாம் வல்ல இறைவன் திருவருட் சேங்கோல் நடத்தி வருகின்றான் என்பதும், அம் முதல்வன், தன்முன் முரணி வாதிடும் மதிமயக்கமுடைய மதவாதிகளால் பெற்று அநுபவித்தற்கரிய அமிழ்தத்தின் நிறைவாக அழகிய தெய்வ சபையிலே அருள் நடம்புரியும் ஒரு பெருந்தெய்வமாகத் திகழ்கின்றான் என்பதும், அம் முதல்வனே தன்னை வழிபடும் அடியார்கள் நினைத்த நற்செயல்களை யெல்லாம் அவர்கள் நினைந்த வண்ணமே இனிது நிறைவேற்றி அவர்களை இறவாத பெருநிலையில் இன்புற்றிருக்க வைக்கும் குருவாகவும் விளங்கின்றான் என்பதும் ஆகிய உண்மைகளை விளக்குவது இத்திருவருட்பா.

சமயவாதிகள் தத்தம் மதங்களே சிறந்தன என்ற உரை அளவில் நின்று விடாமல் மதவெறி பிடித்து ஒரு மதத்தாரை மற்றொரு மதத்தார் வருத்தித் துன்புறுத்தும் நிலையில் மதப் போர்களால் மக்கள் உற்ற அல்லல்களை எல்லாம் எண்ணி வருந்திய இராமலிங்க வள்ளலார், தம் வழிபடு கடவுளாகிய முருகப் பெருமானை நோக்கித் தம் இளம்பருவத்தே பாடிய கந்த கோட்டப் பதிகத்தில் 'ஒருமையுடன் நினது' எனத் தொடங்கும் பாடலில் 'பெருநெறி பிடித்தொழுக வேண்டும், மதமான பேய் பிடியாதிருக்கவேண்டும்' என இரந்து வேண்டியுள்ளார். இளமைப் பருவத்திலேயே அவர்கள் வேண்டிய இவ்