பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

203

 விண்ணப்பத்தை ஏற்றருளிய இறைவன், பிற்காலத்தில் அடிகளார் தம் உள்ளத்தே குரு முதல்வனாகத் தோன்றி 'நீ என் பிள்ளை, உலகத்தில் உள்ள சமயநெறி மதநெறி களெல்லாம் பேயால் பிடியுண்டு பித்தேறிய பிள்ளைகளின் விளையாட்டு என்பதனை உள்ளவாறு உணர்ந்து கொள்ள மாட்டாத மக்கள், சாதி மத பேதங்களாலும் சாத்திர கோத்திரங்களாலும் பல்வேறு வகையினராய் வேறுபட்டுத் தம்முட் போர் செய்து உலக வாழ்க்கையில் ஒரு பயனும் பெறாது வீணே இறந்தொழிந்தார்கள். இனிமேலும் உலகமக்கள் இவ்வாறு கெட்டொழியாதபடி என் அன்புக்குரிய பிள்ளையாகிய நீ, தாய்மையுற்ற சுத்த சன்மார்க்க நெறியினை உலகத்தார்க்கு எடுத்துக் காட்டி, இந்நெறியால் அடைதற்குரியதே. மெய்ப்பொருள் என்பதை அவர்களுக்கு விளங்க உணர்த்தி எல்லா உயிர்களும் அழகிய இன்பநிலையினைப் பெறும்படி செய்வாயாக! என் அன்புக்குரிய பிள்ளை நீயே யாதலால் அவ்வுரிமைபற்றி இப்பணியை விரைந்து செய்க என உனக்குக் கட்டளையிட்டோம். இப்பெரும் பணியினைச் செய்தல் என்னால் இயலுமோ இயலாதோ என்று நின் மனத்தில் ஐயுறாதே' என அறிவுறுத்தியருளினான். இவ்வாறு குருமுதல்வனாகிய இறைவன் அருளிய கட்டளையை ஏற்றுக் கொண்ட அருட்பிரகாச வள்ளலார் உலக மக்கள் உய்திபெறச் சமரச சுத்த சன்மார்க்க நெறியினைப் பரப்புதலையே தமது வாழ்வின் கடமையாகக் கொள்வாராயினர். இச் செய்தி,

பேருற்ற உலகிலுறு சமய மதநெறி எலாம்
      பேய்ப் பிடிப்புற்ற பிச்சுப்
பிள்ளை விளையாட்டென உண்ர்ந்திடாதுயிர்கள் பல
      பேதமுற் றங்கு மிங்கும்