பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204


போருற் றிறந்து வீண்போயினார் இன்னும்வீண்
      போகாத படி விரைந்தே
புனிதமுறு சுத்த சன்மார்க்க நெறி காட்டிமெய்ப்
      பொருளினை உணர்த்தி எல்லாம்
ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதி நீ
      என் பிள்ளை யாதலாலே
இவ்வேலை புரிக என்றிட்டனம் மனத்தில்வே
      றெண்ணற்க என்ற குருவே
நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்
      நிறைந்திருள் அகற்றும் ஒளியே
நிர்க்குணா னந்தபர நாதாந்த வரை ஒங்கு
      நீதி நடராசபதியே

-(3677)

எனவும்.

பன்னெறிச் சமயங்கள் மதங்கள் என்றிடும்ஒர்
      பவநெறி இதுவரை பரவிய திதனால்
சென்னெறி அறிந்திலர் இறந்திறந் துலகோர்
      செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனிநீ
புன்னெறி தவிர்த்தொரு பொதுநெறி எனும்வான்
      புத்தமு தருள்கின்ற சுத்தசன் மார்க்கத்
தன்னெறி செலுத்துக என்றஎன் அரசே
      தனிநடராச என் சற்குரு மணியே

- (3696)

எனவும் வரும் திருவருட்பாப் பாடல்களால் நன்கு புலப் படுத்தப் பெற்றுள்ளமை காணலாம்.

எல்லாம் வல்ல இறைவன் அருட்பெருஞ்சோதி ஆகிய திருவருள் ஒளியினை வள்ளலாருக்கு அன்புடன் அளித்து எத்தகைய சமயநெறிகளையும் தனக்கு அங்கமாக ஏற்றுக் கொள்ளும் ஒருமையுணர்வை நல்கும் சிவநெறி நிலை