பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206



பொய்பிடித்தார் எல்லோரும் புறத்திருக்க நான்போய்ப்
     பொது நடங்கண் டுளங்களிக்கும் போது மணவார்
மெய்பிடித்தாய் வாழியநீ சமரச சன்மார்க்கம்
     விளங்க உலகத்திடையே விளங்குக என்றெனது
கைபிடித்தார் நானும் அவர் கால்பிடித்துக் கொண்டேன்
     களித்திடுக இனியுனை நாம் கைவிடோம் என்றும்
மைபிடித்த விழியுலகர் எல்லாரும் காண
     மாலையிடடோம் என்றெனக்கு மாலை யணிந்தாரே

(5769)

என வரும் திருவருட்பாவாகும்.

இறைவனது திருவருட் குறிப்பின் வண்ணம் சமரச சுத்தசன்மார்க்க நெறியினை மேற்கொண்டு பார்வதிபுரம் என்ற வடலூரில் சத்தியஞானசபையை நிறுவிய அருட்பிரகாச வள்ளலார், எல்லாம் வல்ல இறைவன் ஒளி நடம் புரியும் திருப்பொதுவாகிய மன்றினிடத்தே உலக மக்கள் எல்லோரும் ஒருமைப்பாடுடையராய் வந்து வழிபாடு செய்து எல்லா நலன்களையும் பெற்று உய்திபெறுதல் வேண்டும் எனவும், இத்தகைய பொது மன்றமாகிய தெய்வத் திருச்சபைக்கு உலக மக்கள் எல்லோரும் அறிவு, திரு. ஆற்றல், காரணமாக, ஒத்தார், உயர்ந்தார் தாழ்ந்தார் என்னும் வேற்றுமையின்றி ஊக்கமுடையராய்ச் சமுதாய வாழ்விலும் அரசியல் வாழ்விலும் தம்முள் ஒத்த உரிமையினைப் பெற்று உலகியலை நடத்துதல் வேண்டும் எனவும், இராமலிங்கவள்ளலார் அருட்பெருஞ்சோதி யாண்டவரை வேண்டிப் போற்றும் சுத்தசன்மார்கக வேண்டு கோளாக அமைந்தன,