பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

207


அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
     ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்பு செயல்வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான்சென்றே
     எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
     திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல்வேண்டும்
தப்பேது நான்செயினும் நீ பொறுத்தல் வேண்டும்
     தலைவநினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே

(4079)

அத்தாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல்வேண்டும்
     அருட்பெருஞ்சோதியைப் பெற்றே அகங்களித்தல் வேண்டும்
செத்தாரை மீட்டும் இங்கே எழுப்பியிடல் வேண்டும்
     திருச்சபைக்கே அடிமைகளாய்ச் செய்வித்தல் வேண்டும்
ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
     ஒருமையுளராகி உலகியல் நடத்தல் வேண்டும்
எத்தாலும் அழியாத வடிவதிலே நானும்
     எந்தாயும் ஒன்றாக இனிதுறல் வேண்டுவனே.

(4082)

எனவரும் திருவருட்பாப் பாடல்களாகும்.

முன்னைத் தமிழ்ச் சான்றோர் தோற்றுவித்து வளர்த்த சன்மார்க்க நெறியினைச் சமயங்கடந்த மோன நிலைக்கு உரியதாக விரிவு செய்து வளர்க்கத் திருவுளங் கொண்ட அருட்பிரகாச வள்ளலார், சமரச சுத்த சன்மார்க்க நெறியினைப் பரப்புதற்குரிய திருவருள் நிலையமாக வடலூரிலே உத்தரஞான சிதம்பரம் சத்திய ஞானசபை தோன்றுதற்கும், அது நிலை பெற்று வளர்வ