பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3


எனவரும் அருட்பாக்கள் வள்ளலாருக்குத் தனிமுத்திப் பற்று இன்மைமையையும், எல்லா வுயிர்களின் பொதுநலம் காணும் சமுதாயப் பற்று இருந்ததையும் தெளிவாக்கும். ஏனையடியவர்களினும் வள்ளலாரைப் பிரித்துக் காட்டுவது இப்பொதுவுணர்வேயாகும். உயிர்த்தொகை நலத்திற்காக முத்தித் தன்னலத்தைத் துறந்தமையால், வள்ளலார் என்ற பெயர் இவ்வகையிலும் பொருந்தும். 'வீடும் வேண்டா விறலின் விளங்கினார்' என்று சேக்கிழார் பெருமான் குறிக்கும் அடியவர் இலக்கணத்திற்கு இலக்கியமாகத் திகழ்பவர் வள்ளலாரே எனப் பேராசியர் வெள்ளைவாரணனார் போற்றியிருப்பது அரிய கருத்தாகும்.

வள்ளலார் அழுத்தமாகச் சாற்றிய சிறப்புக் கோட்பாடுகளில் அன்று மரணமிலாப் பெருவாழ்வு ஒளியுடம்பு பெறும் இக்கொள்கை புதிதன்று எனவும், சங்கவிலக்கியம் திருக்குறள் திருமந்திரம் திருவாசகம் பெரியபுராணம் தாயுமானவர் முதலான தமிழ் நூல்களிற் சான்றுகள் உள எனவும் பேராசிரியர் வெள்ளைவாரணனார் வான் முறைச்சிந்தனையாக எடுத்துக்காட்டுவர். இவ்வாறு சிவஞானிகளுக்கு வற்புறுத்திய சமாதிக் கிரியையைச் சன்மார்க்க நெறி நிற்போர் அனைவர்க்கும் உரிய கிரியையாக இராமலிங்க வள்ளல் வற்புறுத்தியுள்ளார் என்று பேராசிரியர் க.வெ. எழுதுவதும் குறிப்பிடத்தகும். எதனையும் மக்கட் பொதுவாகச் செய்வது வள்ளலாரின் பெருநெறியாதவின் சாகாக்கலையும் பொதுவாயிற்று.

இக்கலைபற்றி விரிந்த விளக்கங்கள் பல்துறையறிஞர்களால் எழுதப்பட்டு வருகின்றன. திரு.வி.க பின்வருமாறு கருதுவர்.