பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212


உண்மைக் கடவுள் உண்டென்றும், அக்கடவுளை உண்மையன்பால் கருதி வழிபாடு செய்யின் அக்கடவுள் திருவருள் நம் கருத்தின் கண் வெளிப்பட்டு விளங்குமென்றும், அத் திருவருள் விளக்கத்தால் மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் தவிர்த்து எக்காலத்திலும், எவ்விடத்தும், எவ்விதத்தும், எவ்வளவும் தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வை அடைதல் கூடுமென்றும் எங்கள் அறிவில் தேவரீர் திருவருளால் உண்மைப்பட உணர்த்தியருளப் பெற்றோம், அவ்வுணர்ச்சியைப் பெற்றது தொடங்கி கடவுள் வழிபாடு எஞ்ஞான்று செய்வோம்? கடவுள் திருவருள் விளக்கம் எந்நாள் அடைவோம்? மரணம், பிணி, மூப்பு, முதலிய அவத்தைகள் எப்போது நீங்கும்?, என்றும் அழியாத பேரின்ப சித்தி எக்காலங் கிடைக்கும்? என்று எண்ணியெண்ணி வழிதுறை தெரியாமல் வருந்தி நின்ற தருணத்தே,

களைப்பறிந்து உதவும் கருணக் கடலாகிய கடவுளே! தேவரீர் 'நெடுங்காலம் மரணம் முதலாகிய அவத்தைகளால் துன்புற்றுக் களைப்படைந்த உங்களை அவ்வவத்தைகளின்றும் நீக்கிக் களைப்புங் கலக்கமும் தவிர்த்து, அழியாத பேரின்ப சித்தியை அடைவித்தற் பொருட்டாகவே பூர்வஞான சிதம்பரத்தின் வடபால் பார்வதிபுரம் என்று குறிக்கப்படுகின்ற உத்தரஞான சித்திபுரத்தில் யாம் அளவு கடந்த நெடுங்காலம் சித்தி யெலாம் விளங்கத் திருவருள் நடஞ்செய்வோம்' என்றும், அது தருணம் மிகவும் அடுத்து சமீபித்தருணம் என்றும், அப்பதியினிடத்தே யாம் அருள் நடம் புரிவதற்கு அடையாளமாக ஒரு ஞானசபை காணுதல் வேண்டும் என்றும் திருவருட் குறிப்பால் அறிவித்ததுமன்றி அருளுருவாகி எங்கள் அகத்தும் புறத்தும் அமர்ந்தருளி யாதொரு