பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சமுதாயச் சீர்திருத்தச் சான்றோர்


தமிழ் நாட்டில் தொன்மைக் காலத்தில் மக்களை நிலத்தாலும் தொழிலாலும் சுட்டுவதன்றி நிறத்தாற் பகுத்துரைக்கும் சாதிவேறுபாடு இடம்பெறவில்லை. தமிழகத்தில் வடவாரியர் குடி புகுந்தபடியால் நால்வகை வருணமாகிய சாதிப் பாகுபாடும் அதன்வழி வந்த கோத் திரமும் குலப்பிரிவும் மெல்ல மெல்லப் புகுத்து நிலை கொள்வனவாயின. இப்பிரிவுகள் தமிழ்நாட்டில் நிலை பெற்ற காலம் கடைச் சங்க காலத்தினை ஒட்டியதாகும். அக்காலத்தில் வாழ்ந்த தமிழ்மக்கள் வருணப் பிரிவின் உயர்வு தாழ்வுகளை உடன்படாது கல்வி ஒழுக்கம் முதலியவற்றிற்கே முதலிடம் தந்தனர். இச்செய்தி,

'வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்ப்பா லொருவன் கற்பின்
மேற் பாலொருவனும் அவன்கட் படுமே'

(புறம்-183)

எனப் பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கூறுதலால் உய்த்துணரப்படும்.

தெய்வப் புலவர் திருவள்ளுவர் எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் எனவும், ஒழுக்கம் உடைமையே குடிமை யெனவும், ஒழுக்கத்திலிருந்து வழுவுதல் மக்களிலும் தாழ்ந்தபிறப்பாய்க் கருதப்படும் எனவும், வேதம்