பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218



குறியில் நான்கு குலத்தின ராயினும்
நெறியில் அக்குலம் நீங்கினராயினும்
அறிவு சங்கரற் கன்ப ரெனப்பெறின்
செறிவுறப் பணிந்தேத்திய செய்கையார்

(பெரிய - குலச்சிறை-4)

எனவரும் பாடலில் மேற்காட்டிய தொடர்ப் பொருளைச் சேக்கிழார்பெருமான் விரித்துக் காட்டியமை இங்குக் கருதத் தகுவதாகும்.

திருஞானசம்பந்தப்பிள்ளையார், திருநீலகண்ட யாழ்ப்பாணருடன் திருச்சாத்தமங்கையை வழிபடச் சென்றபோது அப்பதியிலுள்ள திருநீலநக்கராகிய அந்தணர் ஆளுடைய பிள்ளையாரையும், அடியார்களையும் வரவேற்று விருந்து செய்து உபசரித்தனர் எனவும், இரவுப் பொழுதாகிய நிலையில் ஞான சம்பந்தர், நீலநக்கரை நோக்கி, நீலகண்ட யாழ்ப்பாணருக்கு இங்குத் தங்க ஓர் இடம் கொடுத்தருளுவீர் எனக் கூறியருளினர் எனவும், அவ்வுரை கேட்ட நீலநக்கர் பெருமகிழ்ச்சியடைந்து தம் வீட்டின் நடுவே அமைந்த வேள்விச் சாலையின் பக்கத் திலே உள்ள கூடத்தில் திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவர்தம் மனைவியார் மதங்கசூளாமணியாரும் அன்றிரவு துயில் கொள்ள இடங்கொடுத்தாரெனவும், அந்நிலையில் நீல நக்கரால் வளர்க்கப்பெறும் வேள்விக் குண்டத்தின் தீ வலஞ்சுழித்து ஓங்கியது எனவும், அவ்வேள்வித் தீயின் ஒளி முன்னைய நிலையைக் காட்டிலும் மிக்கு ஒளிர்ந்தது எனவும் சேக்கிழார் பெருமான் திருநீலநக்க நாயனார் புராணத்தில் விரித்துக் கூறியுள்ளார். கி. பி. ஏழாம் நூற்றாண்டில் பாணர், பறையர் முதலியோர் மரபு இழிந்த குலமாகக் கருதப்பட்டு வந்தது என்பதும் அன்புடைய அடியார்களது பிறந்த குலத்தின் தாழ்வினை மனங்கொள்ளாது அவர்தம் பத்தித் திறத்தின்