பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

221


யுளங்கொண்ட நாவுக்கரசர், யாவராலும் வழிபடுதற்குரிய முழுமுதற் கடவுளாகிய மயிலாடுதுறைப் பெருமானை நோக்கித் 'தம் உள்ளத்தே நுண்ணிய பொருளை யுணர்ந்தோர்க்கு உடலில் புறத்தே முப்புரி நூல் அணிதலும் இன்றியமையாத ஒன்றோ' என வினவுவதாக அமைந்தது,

கோலும் புல்லும் ஒருகையிற் கூர்ச்சமும்
தோலும்பூண்டு துயரமுற் றென்பயன்
நீலமாமயி லாடு துறையனே
நூலும் வேண்டுமோ நுண்ணுர்ந் தோர்கட்கே

(5–39-9)

என வரும் திருக்குறுந்தொகையாகும்.

இத்திருப்பாடலில், உயிர்க்குயிராகிய நுண்ணிய மெய்ப்பொருளை உணர்ந்து வழிபடும் நிலையில் தம் உள்ள த்தைச் செலுத்தாது தண்டமும் தருப்பையும் முப்புரிநூலும் தாங்கிய புறவேடங்களையுடைய விரதியராயொழுகும் வேதியர் செயல் முடிந்தபயனாகிய வீடுபேற் றின்பத்தினை நல்காது என்னுக் குறிப்பு இடம்பெற்றுள்ளமை காணலாம்.

விரதமே பரமாக வேதியரும்
சரதமாகவே சாத்திரங் காட்டினர்.

(போற்றி-வரி 50/51)

எனவரும் திருவாதவூரடிகள் வாய்மொழியும்,

ஆதி மறையோதி அதன்பயன் ஒன்றுமறியா
வேதியர்சொல் மெய்என்று மேவாதே

(நெஞ்சுவிடுதூது)