பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

225


யர்க்கு அடிமையாதல் பொருந்துமோ என அவைமுன் தம் நிலைமையைப் புலப்படுத்திய நம்பியாரூரரே திரு ஆரூர்ப்பெருமான் திருவருளால் அந்தணர், குயவர், பாணர் முதலிய வேற்றுமைகளை அறவே களைந்து அடியார் எல்லார்க்கும் அடியேன் எனப் போற்றிப் பாடிய பதிகமாதலால் இத்திருப்பதிகம் உலகியலில் இடம்பெற்ற சாதி வேற்றுமையென்னும் தீமையினை அறவே களையும் ஆற்றல் வாய்ந்த அருமருந்தாயிற்று. இவ்வாறு சாதி யென்னும் தீமையை இல்லையாக்கி அறவே களைந்த இத்திருப்பதிகத்தைத் 'தீதிலாத் திருத்தொண்டத் தொகை' என அருண்மொழித்தேவர் சிறப்பித்தது பெரிதும் பொருத்தமுடையதேயாம்.

சாதி வேறுபாடாகிய இத்தீமை அருளியல் வாழ்விலன்றிச் சமுதாய வாழ்விலும் இடம் பெறுதல் கூடாது என்னும் மெய்மையை வற்புறுத்தும் நிலையில் அமைந்தது வன்தொண்டராகிய சு ந் தர மூ ர் த் தி சுவாமிகளது வரலாறாகும். ஆதிசைவ அந்தணராகிய ஆரூரர், உருத்திர கணிகையர் குலத்தில் தோன்றிய நங்கை பரவையாரையும், வேளாண் குடியில் தோன்றிய சங்கிலியாரையும் திருமணம் செய்து கொண்டு பல்வேறு அடியார்களுக்கு அமுதளித்து வாழ்ந்தமையும், அந்தணராகிய சோமாசி மாறர், அரசராகிய சேரமான் பெருமாள், குறுநில மன்னரான பெருமிழலைக் குறும்பர், வேளாண் குடியினராகிய கோட்புலியார், ஏயர்கோன் கலிக்காமர் முதலிய பல்வேறு குடும்பத்தினராகிய அடியார்கள் பலரோடும் அன்பினாற் கலந்து அளவளாவினமையும், கோட்புலியார், வனப்பகை சிங்கடி என்னும் தன் பெண் மக்கள் இருவரையும் அடிமைப் பெண்களாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்ட, அவ் விருபெண்களையும் தம்முடைய இரு குழந்தைகளாக ஏற்றுக் கொண்டு வளர்த்த