பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

229


மக்கள் பல்வேறு வகையினராகப் பிரிந்து தம்மில் முரண்டுபட்டுத் தமது அறிவு, ஆண்மை, பொருள் என்னும் மூவகையாற்றல்களையும் இழந்து அயல் நாட்டார்க்கு அடிமைப்படும் அவல நிலைக்கு உள்ளாயினர். உலகியல் வாழ்விலும் அருளியலாகிய தெய்வ வழிபாட்டு நெறியிலும் ஒற்றுமையின்றி இழி நிலையுற்ற இந்நாட்டு மக்களை அடிமை நிலையினின்றும் விடுவித்து உரிமையுணர்வினராகச் செய்து 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' எனத் திருமூலர் அருளியவாறு நன்றே நினைந்து 'நமனில்லை' எனவும், அச்சமின்றி வாழலாம் எனவும் அறிவுறுத்திய பெருமை அருட்பிரகாச வள்ளலார்க்கேயுரிய தனிச் சிறப்பாகும். சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிமக்களது ஒற்றுமையுணர்வுக்குத் தடையாகவுள்ள சாதிசமயசாத்திர வேற்றுமைகளைத் தம்முடைய செழுந்தமிழ்ப் பாடல்களாலும், சீவகாருண்ய வொழுக்கத்தின் வழிப்பட்ட செயல்முறைகளாலும் வேரறக்களைந்த அருளாளர் இாமலிங்க வள்ளலார் ஒருவரே எனக் கூறுதல் மிகவும் பொருத்தமுடையதாகும்.

பார்ப்பனர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என வடநூல்களிற் கூறப்படும் நால்வகை வருணங்களும் பிரம்மச்சரியம். கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாஸம் எனப்படும் நால்வகை ஆசிரமப் பகுப்புக்களும் இவற்றுக்கு உரியவாக நியமித்துரைக்கப்படும் உலகியல் நடைமுறைகளும் முதலாக வடமொழி மிருதி நூல்களிற் கூறப்படுவன யாவும் அறிவாற்றல்களிற் குறைந்த சிறுபிள்ளைகள் தம் விளையாட்டுக்களில் வரையறை செய்து கொள்ளும் விளையாட்டு விதிகளைப் போல்வனவேயன்றி மெய்ந் நெறிக்குரிய நடைமுறைகளாகமாட்டா. மக்களுடம்பின் மேற் போர்க்கப் பெற்றுள்ள தோலின் நிறங்களைக்