பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232


சாதிமதம் சமயமுதற் சங்கற்ப விகற்பமெலாந் தவிர்ந்து போக
ஆதிநடம் புரிகின்றான் அருட்சோதி எனக் களித்தான்

(4508)

என வரும் வள்ளலார் அருண்மொழிகளால் நன்கு புலனாகும்.

மேற்குறித்த சாதி மத விகற்பங்கள் யாவும் மெய்ம்மையாவன அல்ல என்பதும், இவ்வேற்றுமைகள் யாவும் மக்களினத்தாரை அறியாமையென்னும் இருட்குழியில் தள்ளுவன ஆதலால் இவற்றை இருந்த இடந்தெரியாமல் அறவேயகற்றி மக்களைத் தெளிவுடையராய்த் திகழ்ந்தின்புறச் செய்யும் சுத்த சன்மார்க்க நெறியே உலகிற் சிறந்து ஒங்குதல் வேண்டும் என்பதும் இறைவனது அருள் விளக்கம் பெற்ற இராமலிங்க வள்ளலாரது பெரு வேட்கையாகும். எல்லோரும் இன்புற்றிருக்க நினைக்கும் தமது பெருவேட்கையினையும், இதுவரை உலகிற் பசியும் பிணியும் பகையும் காரணமாகக் கொதிப்புற்ற மக்கள் அக்கொதிப்படங்கிக் கொலை களவு முதலிய குற்றங்களை விட்டொழித்து இவ்வுலகில் என்றும் இன்பம் பெருக வாழ்வர் என்பதனையும் அறிவுறுத்தும் முறையில் அமைந்தன,

இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை
     இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப்போட்டு
மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம
     வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப்போட்டு
தெருட்சாருஞ் சுத்த சன்மார்க்க நன்னீதி
     சிறந்து விளங்க ஓர்சிற்சபை காட்டும்
அருட்பெருஞ்சோதி என் ஆண்டவர்நீரே

(4654)