பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

233


மதித்த சமயமத வழக்கெல்லாம் மாய்ந்தது
     வருணாச் சிரமமெனு மயக்கமும் சாய்ந்தது
கொதித்த லோகா சாரக் கொதிப்பெல்லாம் ஒழிந்தது
     கொலையும் களவும் மற்றைப் புலையும் அழிந்தது

(4503)

எனவரும் திருவருட்டாப் பாடல்களாகும். வள்ளலார் வற்புறுத்திய இக்கருத்தினையே துறவுப்பெருஞ் செல்வராகிய பாம்பன் குமரகுரு தாச சுவாமிகளும் "தள்ளற் பாலது சாதிவிகற்பமே" (தகராலயரகசியம்-பாயிரம்-3) என உறுதிப்படுத்தியருளினர். 'சாதிப்பெருமை சிறுமைகள் பாராட்டுதலாலுறும் அகங்காரமும் அசட்டையும் வருண ஆச்சிரம தரும கருவசங்கற்பம் பந்தம்' என்பது, எசுர்வேத நிராலம்போபநிடதம் கூறுகின்றபடி வீடு பேற்றிற்கு விக்கினமாதலின், 'தள்ளற்பாலது சாதி விகற்பமே' என்றார். 'வேதமுடிகளிற் போதரும் தகராலய ரகசியத்தைக் கேட்டலும் அறிதலும் எல்லாச் சாதியார்க்கும் பொருந்தா என மறுப்பார் மாற்றத்தை மறுத்துப் பக்குவமுடையார் எம்மரபினராயினும் உரியார் என நிறுவியவாறு' எனவரும் அதன் உரையால் இனிது விளங்கும்.

மக்களைப் பிரித்து வேற்றுமைப்படுத்தும் சாதி என்னும் பகுப்பு வெறுங்கற்பனையேயன்றி நிலையானது அன்று என்பதனையும், மக்களை ஈகை முதலிய நற்செயல் களால் வகைப்படுத்துப் போற்றும் சிறப்புடைய பகுப்பே என்றும் நிலையுடையதென்பதனையும்,

'சாதி யிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கி லுள்ள படி'