பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

238


ஒண் திறல் யோகிகளே
     பேரணி உந்தீர்கள்
திண் திறற் சித்தர்களே
     கடைக் கூழை செல்மின்கள்
அண்டர் நாடாள்வோம் நாம்
     அல்லற் படைவாராமே!

(திருப்படை எழுச்சி 2)

எனவரும் திருவாசகமாகும்.

இங்குச் சொல்லப்பட்ட, துரசிப்படை, கைகோட் படை பேரணிப்படை, கூழைப்படை, என்னும் நால் வகைப், படைகளுள் கூழை என்பது முன்னே சென்ற மூவகைப் படைகளும் பின் வாங்காத படி அவற்றைப் பின்னின்று தாங்கிச் செலுத்தும் ஆற்றல் மிக்க படைப் பிரிவாகும். உலகில் அல்லற் படை உயிர்களைத் தாக்காத வாறு பேரின்ப தாட்டினைக் கைப்பற்றிக் கொள்ளும் ஞானப்போரில் கூழைப் படையாக நின்று தாங்கிச் செலுத்தும் கிண்மையும், ஆற்றலும் வாய்ந்தவர்கள் 'சிவசித்தர்களே' என் ப து புலப்பட "திண்திறல் சித்தர்களே கடைக் கூழை செல்மின்கள்" எ ன த் திருவாதவூரடிகள் பணித்தருளியுள்ளமை சித்தர்களின் சிறப்பினைப் புலப்படுத்துவதாகும். உலகமக்கள் அல்லற் படாதவாறு மன்னுயிர்களை உய்வித்தலையே குறிக்கோளாகக் கொண்டு தன்னலங் கருதாது வாழும் திண்திறல் சித்தர்களில் ஒருவராக வைத்துப் போற்றுதற் குரியவரே நம் அருட்பிரகாச வள்ளலார் ஆவர். இந்நுட்பம் திருவருட்பாவினை ஊன்றிப் பயில்வார்க்கு இனிது புலனாகும். வள்ளலார் பெற்ற சித்தி நெறி அவர் தம் ஆன்ம முயற்சியால் வந்தது அன்று. உயிரிரக்கமே தனது வடிவாகக் கொண்டு எல்லா வுயிர்களிடத்தும் அன்பு