பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

இரக்கம் நீங்கில் என்னுயிரும் நீங்கும்; என்னையும் இரக்கத்தையும் ஒன்றாக இசைவித்தான் திருச்சிற்றம்பலத்தான் எனவும், உயிர்கள் படும் துயரங்களைப் பார்த்தும் கேட்டும் கணமும் பொறுக்கமாட்டேன் எனவும், உயிர்களின் துன்பம் தவிர்க்கும் வரம் அருளுக எனவும் வள்ளற் பெருமான் தொடுத்த பாக்கள் சீவ காருணியம் என்னும் உயிரிரக்கமே அருட்பாவின் சித்தாந்தம் என்பதைத் தெளிவாக்கும். சீவகாருணியமே சன்மாக்கமாம், புண்ணியமாம், கடவுள் வழிபாடாம். முததியின்பமாம், ஆன்ம இயற்கை விளக்கமாம்: மற்றையவெல்லாம் மாயாசாலச் செய்கைகளாம் என்று சிவகாருணிய ஒழுக்கம் எனப்பெயரிய தம் உரைநடை நூலிலும் வள்ளலார் அழுத்தம் திருத்தமாக எதிர்வாதங்களோடு நாட்டியிருப்பதை நாம் ஒருதலையாகக் கடைப் பிடிக்க வேண்டும்.

அருட்பிரகாச வள்ளலின் இரக்கவெல்லைக்கும் இரக்கப் புறனடைக்கும் ஓர் எடுத்துக்காட்டு; கொலையையும் முற்றும் கண்டிப்பவர் அடிகளார்; கொலைஞரையும் புலாலுண்ணிகளையும் பகையாகக் கருதுபவர் அடிகளார். இவ்விருசாராரையும் மனிதவினமல்லாதவர் என்று தள்ளும்படி அடிகளார் செய்வர்: என்றாலும் இவர்கள் பாலும் ஒருநிலையில் அடிகளார்க்கு இரக்க வுணர்வு உண்டு. அவர்களும் பசித்துயர்படப் பொறார்.

உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்
உறவினத்தா ரல்லர் அவர் புறவினத்தார் அவர்க்குப்
பயிர்ப்புறுமோர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக

என்பது அருள்விளக்கமாலை இரக்கத்துக்கு எக்கொடிய உயிருங் கூட விலக்கில்லை என்ற அடிகளாரின் ஆன்ம