பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240


திருத்தொண்டாகவும், தமது வாழ்வின் கடமையாகவும் கொள்வாராயினர்.

இங்ஙனம் முத்தி நெறியைச் சாதனமாகவும் சித்தி நெறியை அதன் பயனாகவும் வள்ளலார் கொண்டமைக்குரிய காரணம் தந்நலம் கருதாது பிற உயிர்களின் நலங் கருதிச் செயற்படும் அவர்தம் பெருங்கருணைத் திறமேயாகும்.

'பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை
     முத்தி பெற்றிடவும் பெற்றிலேன்
உரியதோர் இச்சையெனக்கிலை என்றன்
     உள்ளம் நீ அறிந்ததே எந்தாய்'

(3399)

என வரும் வள்ளலார் வாய்மொழி அவர் தமக்கென எதனையும் விரும்பாமையை நன்கு புலப்படுத்துதல் காணலாம்.

கூடும் அன்பினிற் கும்பிட லேயன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்.

(பெரியபுரா; திருக்கூட்டச் சிறப்பு 8)

என எவ்வுயிர்க்கும் அன்புடையராகிய அடியார்களின் இயல்பு குறித்து அருண்மொழித் தேவர் குறிக்கும் இலக்கணத்திற்கு நம் அருட்பிரகாச வள்ளலார் இலக்கியமாகத் திகழ்கின்றார் எனக் கூறுதல் பெரிதும் பொருத்த முடையதாகும்.

வள்ளலார், உலக மக்கள் துன்பம் நீங்கி இன்பம் பெறுவற்குரிய வண்ணம் சன்மார்க்க நெறியை வளர்க்கவும், அந்நெறிக்குரிய ஒழுக்கமும் மெய் வாழ்க்கையும் பெற்றுச் சிற்சபை நடமும் பொற்சபை நடமும் நாள்