பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244


குணம் அறியேன் செய்தபெருங் குற்றமெலாம் குணமாகக்
     கொண்டருளி என்னுடைய குறிப்பெல்லாம் முடித்து
மணமுறு பேர் அருளின்ப அமுதமெனக்களித்து
     மணிமுடியுஞ் சூட்டி எனை வாழ்கஎன வாழ்த்தித்
தணவலிலா தென்னுளத்தே தான்கலந்து நானுந்
     தானுமொரு வடிவாகித் தழைத் தோங்கப் புரிந்தே
அணவுறுபேர் அருட்சோதி அரசு கொடுத்தருளி
     ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்தருளே

(௸ 4188)

எனவரும் திருவருட்பாப் பாடல்களாகும்.