பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

256

மாலாங்கனே யிங்கு நான் வந்த காரணம்
நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு
மூலாங்கமாக மொழிந்த திருக் கூத்தின்
சீலாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே

(திரு-77)

எனவரும் பாடல்களில் எடுத்துக் காட்டியுள்ளமை காணலாம்.

'இந்நிலவுலகில் மூலனுடம்புடன் தாம் நெடுங்காலம் தங்கியிருத்தற்குரிய நோக்கம் சிவத்துடன் பிரிப்பின்றி விளங்கும் அருட்சத்தியாகிய புவனாபதியென்னும் அருந்தவச் செல்வியை வழிபட்டு அவ்வன்னையின் திருவருளால் இவ்வுலகில் பத்தி நெறியையும், யோக நெறியையும், ஞான நெறியையும் நிலைபெறச் செய்து இறைவனது அருட்கூத்தினை விளக்கும் தமிழ் வேதமாகிய திருமந்திரப்பனுவலை அருளிச் செய்தற் பொருட்டேயாம்' எனத் திருமூல நாயனார் தம் மாணாக்கர்கட்கு அறிவுறுத்தும் நிலையில் அமைந்தன மேற்காட்டிய திருமந்திரப் பாடல்களாகும், மூலன் என்னும் ஆயன் இறந்த நிலையில் அவனால் மேய்க்கப் பெற்ற பசுக்கள் உற்ற துயரங் கண்டு அதனை நீக்குதற் பொருட்டு ஆயனாகிய மூலனுடலுட் புக்குத் திருமூலராயெழுந்தவர் சிவயோகியராகிய செந்தமிழ்ச் சித்தர். இவர் இறைவனருளால் சதாசிவமூர்த்தியை ஒத்துச் சிவாகமப் பொருளை அறிவுறுத்தும் முற்றுணர்வும் தேவர்க்கெல்லாம் முதன்மையும் உடையவராக அழியா உடம்புடன் திகழ்ந்தார் என்பது வரலாறு. இச்செய்தி:

'நந்தியருளாலே மூலனை நாடிப்பின்
நந்தியருளாலே சதாசிவனாகினேன்