பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

261


கவிமணி உரை) என இப்பாடலுக்குச் சிவக்கவிமணி அவர்கள் தரும் விளக்கம் இங்கு மனங்கொள்ளத்தகுவ தாகும்.

சேரமான் பெருமாள் நாயனாரும் தம் தோழராகிய நம்பியாரூரரும் இவ்வுலகில் தாம் பெற்ற மனித உடம் புடனேயே திருக்கயிலாயத்தை அடைந்தனர் என்பது வரலாறு.

'களையா உடலோடு சேரமான் ஆரூரன்
விளையா மதமாறா வெள்ளானை மேல்கொள்ள'

(திருவிசைப்பா-189)

எனப் பூந்துருத்தி நம்பிகாடநம்பியும்,

ஞான ஆரூரரைச் சேரரை அல்லது நாம் அறியோம்
மானவ ஆக்கையொடும்புக் கவரை வளரொளிப்பூண்
வானவ ராலும் மருவற் கரிய வட கயிலைக்
கோனவன் கோயில் பெருந்தவத்தோர் தங்கள் கூட்டத்திலே.

(திருத்தொண்டர் திருஅந்தாதி-86)

என நம்பியாண்டார் நம்பியும் அருளிய பொருளுரைகளால் இவ்வரலாறு வலியுறுத்தப் பெற்றமை காணலாம். இதற்கு அகச் சான்றாக அமைந்தது, சுந்தரர் திருக்கயிலை சென்ற போது பாடியருளிய

தானெனை முன்படைத்தான் அதறிந்து தன் பொன்னடிக்கே
தானெனப் பாடலந்தோ நாயினேனைப் பொருட்படுத்து
வானெனை வந்தெதிர் கொள்ள மத்தயானை அருள்புரிந்து