பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

268


ஞானவடிவேயாகி ஒளியுருப்பெற்ற நிலையில் திருப்புகலூர் அண்ணலார் சேவடிக்கீழ் அமர்ந்தருளினார் என்பதனை,

மண்முதலாம் உலகேத்த மன்னுதிருத் தாண்டகத்தைப்
புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன் எனப்புகன்று
நண்ணிரிய சிவானந்த ஞானவடி வேயாகி
அண்ணலார் சேவடிக் கீழ் ஆண்டவர சமர்ந்திருந்தார்.

(பெரிய-திருநாவு-427)

எனவரும் திருப்பாடலில் அருண்மொழித்தேவராகிய சேக்கிழார் தெளிவாகக் குறித்துள்ளமை காணலாம். இத்திருப்பாடலில் குறிக்கப்பட்ட திருநாவுக்கரசரது முத்தி நிலையைச் சிவக்கவிமணியவர்கள் பின்வருமாறு விளக்குவர்:

'அஞ்ஞான்று தூயவெண்ணீறு துதைந்த பொன் மேனி முதலியனவாக உலகர் கண்டு கொண்டிருந்த நாயனாரது திருவுருவம் என்னவாயிற்று எனின், கருப்பூரச் சோதி போலக் கரைந்து இறைவனது அருள் ஒளி நிறைவினுக்குள் கலந்ததென்க.'

நந்தனார்: 'உலகுய்ய நடமாடும் எல்லையினைத் தலைப்பட்டார் யாவர்களும் கண்டிலரால்' என்றதும் (பெரிய-திருநாளைப் போவார்-33)

மணிவாசகனார். 'இத்திருவாசகத்துக்குப் பொருளாவர் இவரே என்று ஆனந்தப் பெருங் கூத்தரைக் கை காட்டித் தம்முருவங் காட்டாமல் மறைந்தார்” என்றதும் இங்கு வைத்து நோக்கத்தக்கன. 'பூம்புகலூர் மேவிய புண்ணியனே உன்னடிக்கே போதுகின்றேன்' என்று சொல்லிக் கொண்டு புகலூர்ப் பெருமானது அருள் நிறைவுக்குள்