பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

269


உலகர் காணாவகை (அப்பர்) உருக்கரந்து மறைந்தனர் என்பதாம்' என்பது சிவக்கவிமணியவர்கள் தரும் விளக்கமாகும். இனி நம்பியாரூரராகிய சுந்தரரும் அவர்தம் தோழர் சேரமான் பெருமாளும் தம்முடம்பினைக் களையாமல் அவ்வுடம்புடனேயே திருக்கயிலாயத்தை யடைந்தார்கள் என்ற செய்தி முன்னர் விளக்கப் பெற்றது. அறிவினாற் சிவனேயாகிய மணிவாசகப் பெருந்தகையார் தாம் பாடிய திருவாகத்துக்குப் பொருள் வினவிய தில்லைவாழ் அந்தணர் முதலிய அன்பர்களுக்கு, திருவாசகத்துக்குப் பொருளாவார் தில்லைச் சிற்றம்பலவராகிய இவரே எனக் கையாற் சுட்டிக்காட்டித் தம்முடைய பசுகரணங்கள் எல்லாம் பதிகரணங்களாக மாறிய நிலையில் தமது உடம்புடன் தில்லைச் சிற்றம்பலமாகிய ஞானவெளியில் கலந்து மறைந்தருளினார் என்பதும், தில்லைப் பெருமான் திருவாதவூரடிகளைப் பாலுடன் விரவிய நீர்போலத் தமது திருவருள் விளக்கத்துள் அடக்கிக் கொண்டருளினார் என்பதும் அடிகளது முத்திப்பேறு பற்றிய வரலாறாகும். இச்செய்தி,

'செய்காட்டும் கமுகடவித் தில்லையுளார் பொருள் கேட்கக்
கைகாட்டித் தம்முருவங் காட்டாமல் மறைந்தாரைப்
பைகாட்டும் பேரரவப் பணியுடையார் தமக்கன்பு
மெய்காட்டிப் பாலுடனே மேவியநீ ராக்கினார்'

(திருவாதவூரடிகள் புராணம் திருவடி பெற்ற சருக்கம்-29)

எனவரும் திருவாதவூரடிகள் புராணத்தால் நன்கு தெளியப்படும். எனவே சைவ சமய குரவர் நால்வரும் செம்பு இரதகுளிகையினாற் செழும் பொன்னாக மாறியது போன்று தாம் இவ்வுலகிற் பெற்றிருந்த