பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

280


வானோர்க்கினிதெனவே மாமறைகள்
சாற்றுகின்ற ஞானோதய அமுதம்

(௸ 3836)

எல்லாமும் வல்ல சித்தென் றெல்லா மறைகளும் சொல்
நல்லார் அமுதமது

(௸ 3837)

ஏழ்நிலைக்கு மேற்பால் இருக்கின்ற
தண்ணமுதல்

(௸ 3838)

ஈன உலகத்திடர் நீங்கி இன்புறச்செய்
ஞான அமுதம்

(௸ 3839)

திரையோ தசத்தே திகழ்கின்ற ஒன்றே
வரையோது தண்ணமுதம்

(௸ 3840)

சோதிமலை வீட்டில் தூயதிரு அமுதம்

(௸ 3841)

இதுபதி இதுபொருள் இதுசுகம் அடைவாய்
     இதுவழி என எனக் கியல்புற உரைத்தே
'விது அமுதொடு சிவ அமுதமும்' அளித்தே
     மேனிலைக் கேற்றிய மெய்ந்நிலைச் சுடரே
பொதுநடம் இடுகின்ற புண்ணியப் பொருளே
     புரையறும் உளத்திடைப் பொருந்திய மருந்தே
சதுமறை முடிகளின் முடியுறு சிவமே
     தனிநடராச என்சற்குரு மணியே!

(திரு-3593)

எனவரும் வள்ளலார் வாய்மொழிகள் தாயுமானார் பாடலிற் குறிக்கப்பட்ட மதியமுதத்தின் இயல்பினை விளக்குவதோடு அதற்கு மேலான சிவ அமுதத்தின் சிறப்பினையும் விளக்குதல் அறிந்தின்புறத்தக்கதாகும்.

உலக மக்களில் கற்றார்கல்லாார் ஆகிய எல்லோரும் ஊழ்வயத்தால் மரணமுறுதல் கண்டு ஆற்றாதவள்ளலார்,