பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

282


பெறுதல் வேண்டும் எனத் தம்மேல் ஆணையிட்டுக் கூறும் முறையில் அமைந்தது,

எல்லாம் செயல்கூடும் என்னாணை அம்பலத்தே
எல்லாம் வல்லான் றனையே ஏத்து.

(திருவருட்பா-3267)

எனவரும் வள்ளலார் வாய்மொழியாகும்.

எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவன் இவ் ஒருபிறவியிலேயே தம்மைப் படிப்படியாகத் திருத்திச் சன்மார்க்கநெறியில் உயர்த்தி இறவா இன்பப் பெருவாழ்வு பெறுதற்குரிய தேக மாற்றத்தையும் சித்தித்திறங்களையும் அன்பு, அருள், இன்ப அநுபவங்களையும் அருளிய செய்தியை அருட்பெருஞ்சோதி வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சத்தியப் பெரு விண்ணப்பப் பகுதியில் விரித்து விளக்கியுள்ளார்.

'உலகியற்கண் பொன் விஷய இச்சை, பெண் விஷய இச்சை, மண்விஷய இச்சை முதலிய எவ்விஷய இச்சை களிலும் என்னறிவை ஒர் அணுத்துணையும் பற்றுவிக்காமல் எல்லா உயிர்களையும் பொதுமையில் நோக்கி எல்லா உயிர்களும் இன்பமடைதல் வேண்டும் என்னும் கருணை நன்முயற்சியைப் பெறுவித்துச்சுத்த சன்மார்க்கத் தனிநெறி யொன்றையே பற்றுவித்து எக்காலத்திலும் நாசமடையாத சுத்ததேகம், பிரணவதேகம், ஞானதேகம் என்னும் சாகாக்கலானுபவ தேகங்களும், தன் சுதந்தரத்தால் தத்துவங்கள் எல்லாவற்றையும் நடத்துகின்ற தனிப் பெருவல்லபமும், கடவுள் ஒருவரேயென்றறிகின்ற வுண்மை ஞானமும், தரும சித்தி, யோகசித்தி, ஞானசித்தி முதலிய எல்லாச் சித்திகளும் பெறுகின்ற அருட்பேறும் பெற்று வாழ்கின்ற பேரின்பப் பெருவாழ்வில் என்னை அடைவிப்