பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

285


ஞானவடிவுமிங்கே நான்பெற்றேன் எங்கெங்கும்
தானவிளை யாட்டியற்றத் தான்.

(5503)

நானே தவம்புரிந்தேன் நம் பெருமான் நல்லருளால்
நானே அருட்சித்தி நாடடைந்தேன் - நானே
அழியா வடிவம் அவை மூன்றும் பெற்றேன்
இழியாமல் ஆடுகின்றேன் இங்கு.

(5513)

கூகா என அடுத்தோர் கூடி அழாத வண்ணம்
சாகா வரம்எனக்கே தந்திட்டான் - ஏகாவ
னேகா என மறைகள் ஏற்றும்சிற் றம்பலத்தான்
மாகா தலனாய் மகிழ்ந்து.

(5510)

உலகமெல்லாம் போற்ற ஒளிவடிவனாகி
இலக அருள் செய்தான் இசைந்தே - திலகன் என
நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன் நம்பெருமான்
தானே எனக்குத் தனித்து.

(5391)

விரைந்து விரைந்து படிகடந்தேன்
     மேற்பால் அமுதம் வியந்துண்டேன்
கரைந்து கரைந்து மனம் உருகக்
     கண்ணிர் பெருக கருத்தயர்ந்தே
விரைந்து ஞான மணம் பொங்க
     மணி மன்றரசைக் கண்டு கொண்டேன்
திரைந்து நெகிழ்ந்த தோலுடம்பும்
     செழும் பொன் உடம்பாய்த் திகழ்ந்தேனே

(5482)

எனவரும் வள்ளலார் வாய்மொழிகள் அவர் இறை வரருளால் பெற்ற இறவாப்பெருநிலையின் இயல்பினை இனிது புலப்படுத்தல் காணலாம். இராமலிங்க வள்ளலார் தம் இளமைப் பருவத்திலேயே ஆளுடைய பிள்ளை