பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

287

பயிலுமூவாண்டில் சிவை தரு ஞானப்
     பால் மகிழ்ந்துண்டு மெய்ந்நெறியாம்
பயிர் தழைத்துறவைத் தருளிய ஞான
     பந்தன் என்றோங்கு சற்குருவே.

(3227)

என வரும் பாடலால் புலனாகும்.

'தத்துவப்படிகளை முறையே ஏறிக் கடந்து தத்துவங் கடந்த மேல் நிலையாகிய தூய நாதமாம் இடத்திலே சார்ந்ததன் வண்ணமா மியல்பினை உடைய ஆன்மாவாகிய நினது இயல்பினை நீ என்னும் உணர்வின்றிப் பொருந்தி நுகர்தல் உயிரனுபவமாகும் என்று இவ்வளவு வெளிப் படையாக ஆன்மாவாகிய எனது இயல்பினை என்னிடத்தே யிருந்தபடி விளக்கி என்னை எனக்குரிய அநுபவப் பொருளாக அளித்தனையல்லவா? முவாண்டில் உமையம்மையார் அளித்த ஞானப்பாலைப் பருகி மெய்நெறியை விளக்கிய ஞானசம்பந்தன் என்னும் உயர்வுடைய குருவே' எனப்போற்றும் நிலையிலமைந்தது,

தத்துவநிலைகள் தனித்தனி ஏறித்
     தனிப்பர நாதமாந் தலத்தே
ஒத்ததன்மயமாம் நின்னை நீயின்றி
     உற்றிடல் உயிரனுபவம் என்
றித்துணை வெளியில் என்னை என்னிடத்தே
     இருந்த வாறளித்தனையன்றோ
சித்தநற்காழி ஞான சம்பந்தச்
     செல்வமே எனது சற்குருவே

(3228)

எனவரும் திருப்பாடலாகும்.

ஒப்பற்ற மேலான தூயநாத வெளியின் மேலே நினது உயிரியல்பை அருளின் வண்ணமாக்கிப் பிறவற்றால் துளக்கமின்றி எக்காலத்து முள்ளதாய்த் தோன்றி