பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

இயக்கமாகிய காரியத்தினை அடிப்படையாகக் கொண்டு இதற்கு நிமித்தகாரணமாகிய முழுமுதற் பொருளொன்று உண்டு எனத் துணிய வேண்டியிருத்தலால், 'உலகு ஆதிபகவனை முதலாக உடையது' என உலகின்மேல் வைத்துக் கடவுள் உண்டு எனும் உண்மையினைப் புலப்படுத்தினர் திருவள்ளுவர். ஆயினும், தனக்கு முதல்வகை ஆதிபகவனைத் தேர்ந்து கொள்ளும் உணர்வுரிமையும் உடைமைத்தன்மையும் உலகிற்கு இல்லை. ஆதலால் உலகிற்கு முதல்வன் ஆதிபகவன் என்பதே இத்திருக்குறளின் கருத்தாகக் கொள்ளுதல் வேண்டும் என விளக்கங் கூறுவர் பரிமேலழகர்.

ஆசிரியர் தொல்காப்பியனரும் 'எழுத்தெனப்படுவ அகரமுதல்' (தொல், நூன்மரபு. 1) எனவும் 'மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்' (தொல், மொழிமரபு 13) எனவும் வரும் நூற்பாக்களில் எழுத்துக்கள் எல்லாவற்றின் இயக்கத்திற்கும் காரணமாய் நிற்கும் அகரம் முதன்மை யுடையதாதலைத் தெளிவாகக் குறித்துள்ளார். 'அகரம் தனியே நிற்றலானும் பலமெய்க்கண் நின்று அவ்வம் மெய்கட் கிசைந்த ஓசைகளைப் பயந்தே நிற்றலானும் வேறுபட்டதாதலின் ஒன்றேயாயும், பலவேயாயும் நிற்பதோர் தன்மையுடைத்து என்று கோடும் (கொள்ளுதும்). இறைவன் ஒன்றேயாய் நிற்கும் தன்மையும், பல்லு யிர்க்கும் தானேயாய் நிற்கும் தன்மையும்போல' எனவும, இறைவன் இயங்குதிணைக் கண்ணும் நிலைத்திணைக் கண்ணும் பிறவற்றின் கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்பமுடிந்தாற்போல, அகரமும் உயிர்க்கண்ணும் தனிமெய்க்கண்ணும் கலந்து அவற்றின் தன்மையேயாய் நிற்கும் என்பது சான்றோர்க் கெல்லாம் ஒப்ப முடிந்தது. அகரமுதல என்னும் குறளால் அகர மாகிய முதலையுடைய எழுத்துக்களெல்லாம்; அதுபோல