பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

289


பிள்ளையாரை அழைத்துப் போற்றும் முறையில் அமைந்தது,

உள்ளதாய் விளங்கும் ஒரு பெருவெளியில்
     உள்ள தாய் முற்றும் உள்ளதுவாய்
நள்ளதாய் எனதாய் நானதாய்த் தனதாய்
     நவிற்றருந் தானதாய் இன்ன
விள்ளொனா அப்பால் இப்படிக்கப்பால்
     பெருவெளிசிவ அனுபவம் என்
றுள்ளுற அளித்த ஞான சம்பந்த
     உத்தம சுத்த சற்குருவே!

(3230)

எனவரும் திருப்பாடலாகும்.

இச்சிவானுபவத்தின் இயல்பினை விளங்க விரித்துரைப்பதாக அமைந்தது,

தேன்தோய் கருணைச் சிவங்கலந்து தேக்குகின்ற
சான்றோர்தம் உள்ளம் தணவாதாய் - மான்றமலத்
தாக் கொழிந்து தத்துவத்தின் சார்பாம் - தருவொழிந்து
வாக்கொழிந்து மாணா மனமொழிந்து - ஏக்கமுற
வாய்க்கும் சுகமொழிந்து மண்னொழிந்து - விண்னொழிந்து
சாய்க்கும் இராப்பகலும் தானொழிந்து - நீக்கொழிந்து
நானுமொழியா தொழிந்து ஞான மொழியா தொழிந்து
தானு மொழியா மற் றானொழிந்து - மோனநிலை