பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

294

இத்தந்திரத்திற் காண்டு மென்றிருந்தோர்க்
சுத்தந் திரத்தின் அவ்வயின் ஒளித்தும்
முனிவற நோக்கி நனிவரக் கெளவி
ஆனெனத்தோன்றி அலியெனப் பெயர்ந்து
வாள் நுதற் பெண்ணென ஒளித்துஞ் சேண்வயின்
ஐம்புலன் செலவிடுத் தருவரை தொறும்போய்த்
துற்றவை துறந்த வெற்றுயி ராக்கை
அருந்தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும்
ஒன்றுண் டில்லை யென்றறி வொளித்தும்
பண்டே பயில்தொறும் இன்றே பயில்தொறும்
ஒளிக்குஞ் சோரனைக் கண்டனம்
ஆர்மின் ஆர்மின் நாண்மலர்ப் பிணையலின்
தாள் தளை யிடுமின்
சுற்றுமின் சூழ்மின் தொடர்மின் விடேன்மின்
பற்றுமின் என்றவர் பற்றுமுற் றொளித்துத்
தன்னேரில்லோன் தானேயான தன்மை
என்னே ரனையோர் கேட்க வந்தியம்பி
அறைகூவி ஆட் கொண்டருளி
மறையோர் கோலங் காட்டி யருளலும்
உளையா அன்பென் புருக வோலமிட்
டலைகடற் றிரையின் ஆர்த்தார்த் தோங்கித்
தலைதடுமாறா வீழ்ந்து புரண்டலறிப்
பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து
நாட்டவர் மருளவுங் கேட்டவர் வியப்பவுங்
கடக்களிறேற்றுத் தடப் பெரு மதத்தின்
ஆற்றேனாக அவயவந் சுவை தரு
கோற்றேன் கொண்டு செய்தனன்
ஏற்றா மூதூர் எழில் நகை யெரியின்
வீழ்வித்தாங்கன் றருட்பெருந்தீயின்
அடியோம் அடிக்குடில்
ஒருத்தரும் வழாமை யொடுக்கினன்