பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

295

தடக்கையின் நெல்லிக் கணியெனக் காயினன்
சொல்லுவதறியேன் வாழி முறையோ
தரியேன் நாயேன் தானெனைச் செய்தது
தெரியேன் ஆவா செத்தேன் அடியேற்
கருளிய தறியேன் பருகியுமாரேன்
விழுங்கியும் ஒல்ல கில்லேன்
செழுந்தண் பாற்கடல் திரைபுரை வித்
துவாக்கடல் நள்ளு நீர் உள்ளகந் ததும்ப
வாக்கிறந்தமுதம் மயிர்க்கால் தோறுந்
தேக்கிடச் செய்தனன், கொடியேன் ஊன் தழை
குரம்பை தோறும் நாயுடலகத்தே
குரம்பை கொண்டின் தேன் பாய்த்தி நிரம்பிய
அற்புதமான அமுத தாரைகள்
எற்புத் துளை தொறும் ஏற்றினன் உருகுவ
துள்ளங் கொண்டோர் உருச்செய் தாங்கெனக்
கள்ளூறாக்கை யமைத்தனன் ஒள்ளிய
கன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறை
என்னையும் இருப்ப தாக்கினன், என்னிற்
கருணை வான் தேன் கலக்க
அருளொடு பராவமு தாக்கினன்
பிரமன் மாலறியாப் பெற்றியோனே.

(திருவாசகம். திரு அண்டப்பகுதி 105-182)

என வரும் திருவண்டப் பகுதியாகும்.

இதன்கண் "காதலர்க்கு எய்ப்பினில்-வைப்பு", "பிச் செமை எற்றிய பெரியோன்" "உளையா அன்பு என்புருக" எனவரும் தொடர்களால் அன்புருவமும், "அருட்பெருந் தீயின் அடியோம் அடிக்குடில், ஒருத்தரும் வழாமை ஒடுக்கினன்", "அளிதரும்யாக்கை செய்தோன்", "கருணை வான்தேன் கலக்க அருளொடு பராவமு தாக்கினன்", என வரும்தொடர்களால் அருளுருவமும், "ஆற்றாஇன்பம்,