பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

இறையவனாகிய முதலையுடைத்து உலகம்' என வள்ளுவளுர் உவமை கூறிய வாற்றாலும், கண்ணன் எழுத்துக் களில் அகர மாகின்றேன் யானே எனக் கூறியவாற்றானும் பிற நூல்களாலும் உணர்க எனவும் தொல்காப்பிய முதற் குத்திர உரையில் நச்சினுர்க்கினியர் அகரத்தைப் பற்றிக் கூறிய கருத்துக்கள் திருக்குறள் கடவுள் வாழ்த்திலுள்ள முதற்குறளின் விளக்கமாக அமைந்திருத்தல் காணலாம். 'அகரமுதல' என்னும் இத்திருக்குறளைத் திருமூலர் முதலிய திருமுறை ஆசிரியர்களும், மெய்கண்டார் முதலிய சைவசித்தாந்த நூலாசிரியர்களும் தாம் வழிபடும் சிவபரம் பொருளுக்குரிய உண்மையியல்பினை அறிவுறுத்தும் நிலையில் மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார்கள். தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறளில் கடவுள், உயிர், உலகம் என்னும் முப்பொருளைப் பற்றிக் கூறப் பெற்றுள்ள தத்துவ உண்மைகளை அடியொற்றிச் சைவ சித்தாந்த மெய்ந்நூற் பொருளை விரித்துரைப்பது உமாபதி சிவம் இயற்றிய திருவருட்பயன் என்னும் சித்தாந்த நூலாகும். இந்நூல் திருக்குறளைப் போலவே பத்துக் குறளைத் தன்னகத்தே கொண்டது ஒரு அதிகாரமாகப் பதிமுதுநிலை முதல் அணைந்தோர் தன்மை ஈறாகப் பத்து அதிகாரங்களையுடையது. திருவள்ளுவர் ‘அகர முதல' எனத் தொடங்கியது போலவே உமாபதி சிவாசாரியாரும் 'அகர உயிர்போல் அறிவாகி எங்கும், நிகரி விறை நிற்கும் நிறைந்து" என இந்நூலைத் தொடங்கி யுள்ளார். அகர ஒலி நாத மாத்திரையாய் எத்தகைய திரிபுமின்றி இயற்கையில் தோன்றுவதாய் ஏனைய உயிரெழுத்துக்கள் தோறும், மெய்யெழுத்துக்கள் தோறும் நிறைந்து முதன்மை உற்று நிற்க, ஏனைய எழுத்துக்க ளெல்லாம் அவ்வகரத்தின் இயக்கத்தால் வெவ்வேறு முயற்சியில் தோன்றித் திரிபுடையனவாய் நிலவுதல் போல, ஆதி பகவனாகிய இறைவன் இயற்கையுணர்