பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

301


மென்றும் மழையின்றி நாட்டிற் பஞ்சமுண்டாகுமென்றும் ஆகவே ஞானிகள் உடம்பினைப் பாதுகாத்துச் சமாதியில் வைத்து வழிபட்டால் நாடாள்வேந்தரும் குடிமக்களும் இறைவனது அருளால் இனிய நல்வாழ்வினைப் பெற்று மகிழ்வார்கள் என்றும் திருமூலநாயனார் தெளிவாக அறிவுறுத்தியருள்கின்றார்.

"அந்தமில் ஞானிதன் ஆகம் தீயினில்
வெந்திடில் நாடெலாம் வெப்புத்தீயினில்
நொந்தது, நாய்நரிநுகரின் நுண்செரு
வந்துநாய் நரிக்குணவாகும் வையமே"

(திருமந்திரம்-1910)

"எண்ணிலா ஞானியுடல் எரிதாவிடில்
அண்ணல் தம் கோயில் அழலிட்டது ஒக்குமால்
மண்ணின் மழைவிழா வையகம் பஞ்சமாம்
எண்ணரு மன்னர் இழப்பர் அரசே"

(௸-1911)

"அந்தமில் ஞானி அருளையடைந்தக்கால்
அந்த வுடல்தான் குகைசெய் திருத்திடில்
சுந்தர மன்னரும் தொல் புவி யுள்ளோரும்
அந்தமில் இன்ப அருள்பெறுவாரே"

(௸-1916)

எனவரும் திருமந்திரப் பாடல்கள் சிவ ஞானிகளது உடம்பினை எரியிலிடாது புதைத்துச் சமாதிவைத்துப் போற்றுதலின் இன்றியமையாமையினை வற்புறுத்துவனவாகும். இவ்வாறு சிவஞானிகளுக்கு வற்புறுத்திய சமாதிக் கிரியையைச் சன்மார்க்கநெறி நிற்போர் அனைவர்க்கும் உரிய கிரியையாக இராமலிங்க வள்ளலார் வற்புறுத்தி யுள்ளார். இறைவனை நினைப்பவர் யாவராயிலும் அவர் தம் உள்ளத்தையும் உடம்பினையும் இறைவன் தனக்குரிய கோயிலாகக்கொண்டு எழுந்தருளியுள்ளான் என்பது,