பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

302


'நினைப்பவர்மனம் கோயிலாக்கொண்டவன்'

(தேவாரம்-5-2-1)

எனவும்,

'இறைவனே நீயென் னுடலிடங்கொண்டாய்'

(திருவாசகம்-392)

எனவும்,

'வினைபடுமுடல் நீ புகுந்து நின்றமையால்
விழுமியவிமானமாயினதே'

(திருவிசைப்பா-117)

எனவும் வரும் ஆன்றோர் அருளிச் செயல்களால் நன்கு புலனாம்.

எல்லோருடைய உள்ளங்களையும் இறைவன் கோயிலாகக்கொண்டு எழுந்தருளியுள்ளான் என்னும் மெய்ம்மையினை உள்ளவாறுணர்ந்து வழிபடும் நெறி சன்மார்க்க மாதலின், அந்நெறியினைக் கடைப்பிடித்தொழுகுவோரது உடம்பினைத் தீயிலிட்டு எரித்தல் கூடாதென்பதும் புதைத்து அடக்கஞ் செய்தலே முறையென்பதும் அருட் பிரகாசவள்ளலார் அறிவுறுத்திய அறிவுரையாகும். இதனைச் சமாதிவற்புறுத்தல் என்னுந்தலைப்பில் அமைந்த பத்துப்பாடல்களில் வள்ளலார் விரித்துக் கூறியுள்ளமை காணலாம்.

ஆன்மா உயிரைவிட்டுப் போயிற்று என்பதனைத் தெளிவாக அறிந்து கொள்ளாதநிலையிலேயே மூச்சடங்கி யவுடனே இறந்து போயினர் எனக்கொண்டு அவர்தம் உடம்பினைச் சுட்டெரிக்குந் தவறான நிகழ்ச்சியும் சில விடங்களில் நேர்ந்து விடுகின்றது, இறப்பு என்பது உறங்குவது போன்றது. உயிர்ப்படக்கி யோகநிலையில் இருப்போரது உடம்பு செத்தாருடம்பினைப்போலக்