பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

308


பது தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பெரிதும் ஆக்கம் தருவதாகும்.

தென்தமிழும் வடமொழியும் ஒதாதுணர்ந்த இராமலிங்க வள்ளலார் வடமொழி முதலிய பிறமொழிகளுக்கில்லாத எளிமையும், தெளிவும் வாய்ந்த தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர் குடும்பத்தில் தம்மைப் பிறப்பித்தருளித் தென்மொழியால் தம்மைப் பாடுவித்தருளிய இறைவனது பெருங்கருணைத் திறத்தினை நினைந்து எல்லாம் வல்ல இறைவனை உள்ளம் கசிந்து போற்றுகின்றார்.

"இடம்பத்தையும், ஆரவாரத்தையும், பிரயாசத்தையும் பெருமறைப்பையும் போதுபோக்கையும் உண்டு பண்ணுகின்ற ஆரியம் முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்லவொட்டாது, பயிலுதற்கும் அறிதற்கும் மிகவும் எளிதாய்ப், பாடுதற்கும், துதித்தற்கும் மிகவும் இனிமையுடையதாய், சாகாக்கல்வியை எளிதில் அறிவிப்பதாய்த் திருவருள் பலத்தால் கிடைத்த தென்மொழி ஒன்றினிடத்தே மனம் பற்றச் செய்து அத்தென்மொழிகளால் பல்வகைத் தோத்திரப் பாட்டுகளைப் பாடு வித்தருளினீர்" எனச் சமரசசுத்த சன்மார்க்க சத்தியப்பெரு விண்ணப்பத்தில் இறைவனை நோக்கி அருட்பிரகாச வள்ளலார் கூறுவதாக அமைந்த இப் போற்றுதல், சேக்கிழார் அருளிய வண்ணம் ஞாலமளந்த மேன்மைத் தெய்வத்தமிழின் சிறப்பினை நன்கு புலப்படுத்தல் காணலாம்.

இராமலிங்கவள்ளலார் தம்முடைய தாய்மொழி யாகிய தமிழ் இறைவனுக்கு உவப்பான மொழியென் பதனையும், கற்றோர் உள்ளத்தில் அமைதியை விளைவிக்கும் தன்மையது என்பதனையும், சிந்தைக்கும்