பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13


ஆன்மாவுக்கும், மெய்யெழுத்து தத்துவப் பிரபஞ்சத்திற்கும், அகரம் ஆதிபகவனாகிய இறைவனுக்கும். உவமை,

திருக்குறளில் முதல் அதிகாரமாகிய கடவுள் வாழ்த்தில் ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமையிலான், இறைவன், பொறி வாயில் ஐந்தவித்தான், தனக்கு உவமை இல்லாதான், அறவாழி அந்தணன், எண் குணத்தான் என்பன கடவுளுக்குரிய திருப் பெயர்களாகக் குறிக்கப் பெற்றுள்ளன. இவை யனைத்தும் இறைவனை ஒருவனாகவே வைத்துக் கூறுதலாலும், மெய்யுணர்தல் என்னும் அதிகாரத்தில் முழு முதற் கடவுளாகிய செம்பொருளை 'ஒர்த்துள்ளம் உள்ளது உணரின்' என்ற தொடரில் 'உள்ளது' என ஒருமை வாசகத்தால் குறிப்பிடுதலாலும், இறைவன் ஒருவனே என்பது தெய்வப்புலவர் கருத்தாதல் நன்கு தெளியப்படும்.

ஒருவாற்றானும் தனக்கு ஒப்பில்லாதவனாய் யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையானாக உயர்ந்து விளங்கும் இறைவன் ஒருவனே என்னும் இவ்வுண்மையினை வற்புறுத்தும் நிலையில் அமைந்தது 'தனக்கு உவமை இல்லாதான்' என்னும் திருக்குறள் தொடராகும். இத் தொடர்ப் பொருளை விரித்து உரைப்பது,

'பெருமைக்கும் நுண்மைக்கும் பேரருட்கும் பேற்றின்
அருமைக்கும் ஒப்பின்மை யான்'

(3)

எனவரும் திருவருட் பயனாகும்.

மிகப் பெரிய அண்டங்கள் யாவும் தன் விரிவினுள் (வியாபகத்துள்) அடங்க, தான் அவையெல்லாவற்றையுங்