பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

319


புன்புலால் உடம்பின் அசுத்தமும் இதனில்
     புகுந்து நான் இருக்கின்ற புணர்ப்பும்
என்பொலா மணியே எண்ணி நான் எண்ணி
     ஏங்கிய ஏக்கம் நீயறிவாய்
வன்புலால் உண்ணும் மனிதரைக்கண்டு
     மயங்கி உள்நடுங்கி ஆற்றாமல்
என்பெலாம் கருக இளைத்தனன் அந்த
     இளைப்பையும் ஐயநீ அறிவாய். (3460)

தலைநெறி ஞான சுத்த சன்மார்க்கம்
     சந்ததம்முயலுறா தந்தோ
கலைநெறி உலகக் கதியிலே கருத்தைக்
     கனிவுற வைத்தனர் ஆகிப்
புலைநெறி விரும்பினார் உலகுயிர்கள்
     பொது எனக் கண்டிரங்காது
கொலைநெறி நின்றார் தமக்குளம் பயந்தேன்
     எந்தைநான் கூறுவதென்னே. (3477)

என வள்ளலார் பிற உயிர்களுக்கு நேரவிருக்கும் துன்பங்களை எண்ணி நெஞ்சங்கசிந்து பாடிய பாடல்கள் இவ்வுண்மையினை நன்கு புலப்படுத்துவனவாகும்.

எல்லாம் வல்ல இறைவனது திருவருளைப் பொருளாகக்கொண்டு தம் பாட்டின் திறத்தாலே கடவுள் உண்மையினையும், கொல்லாமை, புலாலுண்ணாமை யாகிய சீவகாருண்ய ஒழுக்கத்தையும், மக்கள் எல்லோரும் ஒரு குலத்தாராய் அன்பினாலொன்றியிருந்து முழுமுதற் பொருள் ஒன்றையே மனமொழி மெய்களால் வழிபட்டு ஈறிலாப் பேரின்ப வாழ்வினை அடைந்து இன்புறுதற்கு ஏதுவாகிய சமரச சுத்த சன்மார்கத்தினையும் பரப்புதலையே தமது வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டிருந்த வள்ளலார், தாம் பரப்ப எண்ணிய இவ்வுயர்ந்த