பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

322


உண்டுண்டு மகிழவே உணவுண்டு சாந்தமுறும்
     உளமுண்டு வளமுமுண்டு
தேருண்டு, கரியுண்டு, பரியுண்டு, மற்றுள்ள,
     செல்வங்கள் யாவுமுண்டு
தேனுண்டு வண்டுறு கடம்பணியும் நின்பதத்
     தியான முண்டாயில் அரசே
தாருண்ட சென்னையிற் கந்த கோட்டத்துள்வளர்
     தலமோங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி

     சண்முகத் தெய்வ மணியே
(28)

எனவரும் திருவருட்பாவாகும். இது

பதியுண்டு நிதியுண்டு புத்திரர்கள் மித்திரர்கள்
     பக்கமுண்டெக் காலமும்
பவிசுண்டு தவிசுண்டு திட்டாந்த மாகயம
     படரெனும் திமிர மனுகாக்
கதியுண்டு ஞானமாங் கதிருண்டு சதிருண்டு
     காய சித்திகளுமுண்டு
கறையுண்ட கண்டர்பால் அம்மைநின் தாளில்
     கருத்தொன்று முண்டாகுமேல்,
நதியுண்ட கடலெனச் சமயத்தை யுண்டபர
     ஞான ஆனந்த ஒளியே
தாதாந்த ரூபமே வேதாந்த மோனமே
     நானெனு மகந்தை தீர்த்தென்
மதியுண்ட மதியான மதிவதன வல்லியே
     மதுசூதனன் தங்கையே
வரைராசனுக்கு இருகண்மணியாயுதித்த மலை
     வளர்காதலிப் பெண் உமையே

(தாயுமானவர் 37 மலைவளர்காதலி 1)

எனவரும் தாயுமானவரின் பாடலை அடியொற்றி அமைந்திருத்தல் காணலாம்.