பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

332


திருத்தொண்டர் வரலாற்றினைக் காப்பியமாக இயற்ற வெண்ணிய சேக்கிழார் அடிகட்குத் தில்லையம்பலவாணர் - முதலாக எடுத்துக் கொடுத்தருளிய மொழி 'உலகெலாம்' என்பதாகும். இறைவனது அருள்வாக் காகிய 'உலகெலாம்' என்னும் மெய்ம்மொழியாற் சுட்டப்பட்ட பொருளைப் பல்லாற்றானும் விரித்து விளக்கும் முறையில் இராமலிங்க வள்ளலார் எழுதிய உரைநடை நூல் 'உலகெலாம் என்னும் மெய்மொழிப் பொருள் விளக்கம்' என்பதாகும்.

சுவை, யொளி, ஊறு, ஒசை நாற்றமென்றைந்தின்
வகை தெரிவான்கட்டே உலகு

(திருக்குறள் - 27)

எனத் திருவள்ளுவரும்

வானந்தம் மண்ணினந்தம். வைத்து வைத்துப் பார்க்க எனக்கு
ஆனந்தம் அந்த அரசே பராபரமே

(பராபரக்கண்ணி-13)

எனத் தாயுமானாரும் கூறிய வண்ணம், தத்துவங்களின் அமைப்பில் உலகங்களைப் பல்வேறு வகையாக வள்ளலார் வகுத்துக் காட்டியுள்ளார். இவ்வாறு ஒரு பொருளைப் பல்வேறு வகையாகப் பகுத்துக் காணும் அடிகளாரது கற்பனைத் திறத்திற்கு இவ்வுரைநடைநூல் சிறந்த எடுத்துகாட்டாகத் திகழ்கின்றது.

வள்ளலார், தமிழ் என்னும் சொல்லுக்கிட்ட உரையும் மூலிகைக் குண அட்டவணை முதலிய மருத்துவக் குறிப்புக்களும் நித்தியகருமவிதி என்னும் நூலும் உபதேசக் குறிப்புக்களும், சுப்பிரமணியம், அருள் நெறி, திருவருள் மெய்ம்மொழி, பேருபதேசம் என்னும் கட்டுரைகளும் மக்கள் இம்மையினும், மறுமையினும் இன்பம்